திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் அதிகளவில் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனையில் அண்மையில் ஆறு மாடிகள் கொண்ட புதிய கட்டடம் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தாலும், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகள் மட்டும் இன்னமும் முகப்பில் உள்ள பழைய கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன.
பழைய கட்டடத்தில் ஆங்காங்கே அமைந்துள்ள துளைகள் மற்றும் பிளவுகள் வழியாக எண்ணற்ற எலிகள் எவ்வித தடையுமின்றி மகப்பேறு வார்டுக்குள் படையெடுத்து வருகின்றன. இதனால், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்களும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் பெரும் அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழிக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ள மகப்பேறு பிரிவில், பிறந்த பிஞ்சுக் குழந்தைகளையும் தாய்மார்களையும் வைத்துக் கொண்டு, எலிகளின் அச்சுறுத்தலுக்கு இடையே அவர்களைப் பராமரிக்க வேண்டிய சூழல் தாய்மார்களுக்குப் பெரும் மன உளைச்சலை அளித்துள்ளது. எலிகள் சகஜமாக நடமாடும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவி, சுகாதாரத் துறையின் பராமரிப்புச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
எனவே, நோயாளிகள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இந்த மகப்பேறு பிரிவைப் புதிய பாதுகாப்பான கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்; அல்லது எலிகள் உள்ளே வராதவாறு தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் நோயாளிகளின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…