“விளையாடச் சென்ற 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: முகத்தில் 55 தையல்கள்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!”

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹித்பூர் தாலுகா, டெல்வாடி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மாஹி என்பவரை ஒரு தெருநாய் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. சிறுமி அலறியும், சுற்றியிருந்தவர்கள் காப்பாற்ற ஓடி வருவதற்குள்ளும் அந்த நாய் அவளது முகத்தைக் கடித்துக் குதறி ரத்த வெள்ளமாக்கியது.

இந்தத் தாக்குதலில் சிறுமியின் கண், மூக்கு மற்றும் உதடு பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஆஹர் பகுதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமிக்கு, கண் மருத்துவ நிபுணர் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு சுமார் 2 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து, அவளது முகத்தில் 55 தையல்களைப் போட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும், காயங்கள் மிகவும் ஆழமாக இருப்பதால் சிறுமியின் கண் பார்வைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுமி மாஹி மேல் சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள எம்.ஒய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறாள். இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் ஆத்திரமடைந்துள்ளனர்; தெருநாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த அலட்சியமே இத்தகைய விபரீதத்திற்குக் காரணம் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Swetha

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

57 minutes ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

1 மணத்தியாலம் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

1 மணத்தியாலம் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

1 மணத்தியாலம் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

1 மணத்தியாலம் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

1 மணத்தியாலம் ago