“முதல்வரே.. உங்க ஆட்களை கன்ட்ரோல் பண்ணுங்க!” TVK நிர்வாகி செய்த காரியம்.. கொதித்தெழுந்த அதிமுக..!!

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத தவெக மருத்துவ அணியினர், எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் நுழைந்து ஆய்வு நடத்தலாம் என ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பும் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பி, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

இச்சம்பவம் குறித்து அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் பிஆர் ஸ்டண்ட் (PR Stunt) நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கட்சியின் மருத்துவ அணி என்ற பெயரில், வெள்ளை கோட் மாட்டிக்கொண்டு மருத்துவமனைகளுக்குச் சென்று அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணி செய்ய விடாமல் இந்த கும்பல் மிரட்டி வருகிறது. முந்தைய திமுக அரசால் மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களை, தங்களின் சோஷியல் மீடியா ரீல்ஸ் கன்டென்ட்டிற்காகத் தொந்தரவு செய்வது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு நடத்த வேண்டுமானால் அதைத் துறை அமைச்சரோ அல்லது அதிகாரிகளுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினரோ செய்யட்டும் என்றும், நோயாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சினிமா படம் போல டாக்டர் வேஷம் போடுபவர்களைத் தவெக தலைமை அடக்கி வைக்க வேண்டும் என்றும் அதிமுக பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

அதேபோல், திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தவெக சார்பில் ஆய்வு நடத்திய இந்தப் பெண், அமைச்சரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ கிடையாது. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்? இவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளைச் செய்யலாமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ள தவெக மருத்துவ அணி நிர்வாகி வாசுதேவி, ஏற்கனவே ‘கரூர் துயரம்’ தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் 41 பேர் பலியானது தொடர்பாக அவதூறு பரப்பியதாக இவர் மீது முன்பே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, தற்போது தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வரும் நிலையில், இந்த அரசு மருத்துவமனை ஆய்வுச் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

நேருவின் சீக்ரெட்டை உடைத்த துரை வைகோ…. “உதயநிதி பற்றி என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா?”…. அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…

2 minutes ago

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

34 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

40 minutes ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

46 minutes ago

“50 மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்…” நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்த சொமாட்டோ ஊழியர்… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…

51 minutes ago

“நரகமான ஹனிமூன்…” பார்பிகியூ தீ விபத்து…! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்….! ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்… நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…

58 minutes ago