யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

Spread the love

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த மார்ச் 17, 2026 அன்று வைஷ்ணவி தனது இல்லத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை, ஹரி பாபுவை முதன்மை குற்றவாளியாகக் கைது செய்தது. தனது தாய் மற்றும் சகோதரர்களின் தூண்டுதலின் பேரில், கூடுதல் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை ஹரி பாபு சித்திரவதை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஹரி பாபு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோதிலும், அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

சிறையிலிருந்து வெளிவந்த ஹரி பாபு, நிஜாமாபாத்தில் தனது தாயுடன் தங்கி சாலையோரத்தில் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமையன்று, காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஹரி பாபுவைக் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஹரி பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைஷ்ணவியின் பழிக்குப் பழியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இதில் வைஷ்ணவியின் உறவினர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கொலையாளிகளை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

Nanthini

Recent Posts

என் குழந்தைகள் அவரை ‘அப்பா’னு தான் கூப்பிட்டாங்க…. கருப்பு முருகானந்தம் மீது கதறும் பாஜக பெண் நிர்வாகி…. டெல்லி மேலிடத்திற்குச் சென்ற ரகசிய கடிதம்….!

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…

40 seconds ago

“காங்கிரஸுடன் லடாய்… தவெக MLA-க்கள் கடுப்பு”…. CTR நிர்மல் குமாருக்கு செக் வைக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்….!

மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…

12 minutes ago

“திமுக தயவு இல்லனா நீங்க எம்.எல்.ஏ-வே ஆகியிருக்க முடியாது”…. வன்னியரசை வைத்தே திருமாவை அலறவிட்ட ராஜகம்பீரன்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…!

\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…

23 minutes ago

நேருவின் சீக்ரெட்டை உடைத்த துரை வைகோ…. “உதயநிதி பற்றி என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா?”…. அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…

40 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

1 மணத்தியாலம் ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

1 மணத்தியாலம் ago