புக்கிங் ஓபன் ஆனதும் வெயிட்டிங் லிஸ்ட் வருதா?.. இனி தட்கல் டிக்கெட் மிஸ்ஸே ஆகாது.. வெறும் 2 நிமிடத்தில் கன்ஃபார்ம் செய்ய IRCTC-யின் ‘மாஸ்டர் ட்ரிக்’..!!!

Spread the love

கோடை விடுமுறை தொடங்கிவிட்டாலே ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடுகிறது. திடீரென அவசரமாகப் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நமக்கு இருக்கும் ஒரே இறுதி வாய்ப்பு தட்கல் (Tatkal) டிக்கெட் மட்டும்தான். ஆனால், தட்கல் புக்கிங் தொடங்கிய சில விநாடிகளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து ‘வெயிட்டிங் லிஸ்ட்’ வந்துவிடுவது வழக்கம். இந்த டென்ஷனைத் தவிர்த்து, வெறும் 2 நிமிடங்களில் கன்ஃபார்ம் தட்கல் டிக்கெட்டை மிக எளிதாகப் புக் செய்ய உதவும் IRCTC-யின் ஒரு சூப்பர் ‘மாஸ்டர் ட்ரிக்’ வெளியிட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் புக்கிங்கில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது என்பதால், முதலில் அதற்கான சரியான நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். ஏசி வகுப்புகளுக்கான (2AC, 3AC, CC) தட்கல் புக்கிங் தினமும் காலை 10:00 மணிக்கும், ஏசி இல்லாத சாதாரண ஸ்லீப்பர் (Sleeper) வகுப்புக்கான புக்கிங் காலை 11:00 மணிக்கும் தொடங்கும். தட்கல் புக்கிங் செய்யும்போது பயணிகளின் பெயர், வயது மற்றும் பெர்த் விருப்பங்களை அந்த நேரத்தில் டைப் செய்வதற்குள் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதுதான் பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை ஆகும். இதைக் தவிர்க்க IRCTC தளத்தில் உள்ள ‘மாஸ்டர் லிஸ்ட்’ (Master List) என்ற அருமையான வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக, தட்கல் புக்கிங் தொடங்குவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பாகவே IRCTC ஆப் அல்லது இணையதளத்தைத் திறந்து, உங்களது கணக்கில் (My Account) உள்ள ‘My Master List’ என்ற ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் பயணம் செய்யவிருக்கும் பயணிகளின் பெயர், வயது, பாலினம் போன்ற விவரங்களை முன்கூட்டியே உள்ளீடு செய்து ‘Add Passenger’ கொடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், தட்கல் புக்கிங் நேரத்தில் பயணிகளின் விவரங்களை டைப் செய்ய வேண்டிய அவசியமிருக்காது; நேரடியாக ‘Add Existing’ என்பதைத் தேர்ந்தெடுத்து, மாஸ்டர் லிஸ்ட்டில் உள்ள பெயர்களைக் கிளிக் செய்து நொடிப் பொழுதில் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடலாம்.

இதனுடன் தட்கல் டிக்கெட் எளிதாகக் கிடைக்க மேலும் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் செலுத்தும் பக்கத்தில் (Payment Page) நெட் பேங்கிங் அல்லது கார்டுகளைப் பயன்படுத்தினால் OTP வருவதற்குத் தாமதமாகலாம்; எனவே, மிக விரைவாகப் பேமெண்ட் செய்ய UPI (PhonePe, GPay, Paytm) முறையைப் பயன்படுத்தலாம் அல்லது எல்லாவற்றையும் விட வேகமாக புக் செய்ய IRCTC வேலட்டில் (Wallet) முன்கூட்டியே பணம் போட்டு வைத்துக் கொள்ளலாம். அதேபோல், புக்கிங் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே லாகின் செய்து காத்திருக்கக் கூடாது; அப்படிச் செய்தால் சரியான நேரத்தில் ஆப் லாக் அவுட் ஆக வாய்ப்புள்ளது என்பதால், புக்கிங் நேரத்திற்குச் சரியாக 2 அல்லது 3 நிமிடங்களுக்கு முன்பு லாகின் செய்வது கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கும்.

Muthu Mani

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

5 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

5 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

5 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

6 மணத்தியாலங்கள் ago