பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ டெலிவரி ஊழியர் சாஹில் கில் என்பவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிலிருந்து காய்கறி வாங்குவதற்காகச் சாஹில் கில் சென்று கொண்டிருந்தபோது, ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை வழிமறித்துத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளனர். அவர்கள் சுட்ட இரண்டு தோட்டாக்களில் ஒன்று சாஹிலின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் நிலையத்தின் மிக அருகிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சலான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அமிர்தசரஸ் போலிஸார், கொலையாளிகளைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…
தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…
அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…