தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்திலுள்ள டெப்சிரின் நோந்தாபுரி உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாங்காக் நகருக்கு வடமேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாங் குராய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, அப் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அம்மாணவர் தன்னைத் தானே பூட்டிக் கொண்டதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துவிட்டதாக நோந்தாபுரி மாகாணக் காவல் துறைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து தாய்லாந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…
தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த விஜய் மோகன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த…
தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று…
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி திமுகவில் பறிக்கப்பட்டதற்குப் பின்னால், ஈரோடு அரசியலில் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு மீதான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்…
தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் வரி மூலமாக கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி…