“விஜய் அண்ணா காப்பாத்துங்க.. உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்”… கோயில் வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற தவெக பெண் நிர்வாகி… வாணியம்பாடியில் பரபரப்பு….!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பூங்குளம் பகுதியில் அமைந்திருக்கும் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்மலை முருகன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலுக்குச் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 32 கிராம மக்கள் திரண்டு வந்து காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல் எனத் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோயில் அமைந்திருக்கும் இடம் மற்றும் கோயில் நிர்வாக உரிமை தங்களுக்குத்தான் சொந்தம் என அப்பகுதியைச் சேர்ந்த பிச்சியம்மாள் மற்றும் அவரது மகள் கலைச்செல்வி ஆகியோர் உரிமைக் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தற்போது வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடி கிருத்திகைத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஊர் பொதுமக்கள் சார்பில் வருவாய்த்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில், நேற்று பிச்சியம்மாளும் அவரது மகள் கலைச்செல்வியும் திடீரென கோயில் கேட்டைப் பூட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனையும் தாண்டி, கலைச்செல்வி திடீரென தனது தலையில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தோரை உரைய வைத்தது. உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதன்பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை தனது கழுத்தில் அணிந்துகொண்டு கோயிலின் அருகே அமர்ந்த கலைச்செல்வி, “விஜய் அண்ணா, உங்கள் கட்சியிலிருக்கும் சகோதரியான எனக்கு உதவி செய்யுங்கள்; அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு திருவிழாவிற்கு அனுமதி அளித்துள்ளனர்” எனக் கண்ணீர் மல்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மாவட்டம் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித தீர்வும் கிடைக்காததால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதில் தலையிட்டுத் தங்களுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, திருவிழா ஏற்பாடுகளால் பூட்டுப் போடப்பட்டு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“பாத்ரூம் போகணும் சார்…” உள்ளே சென்ற கைதி… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ,,,!!

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…

12 minutes ago

“பெண்கள்னு கூட பார்க்கல…” மீன், காய்கறிகளை தூக்கி வீசி தாக்கிய அதிகாரி…. நண்பருடன் சாதி பெயரை சொல்லி ரகளை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…

25 minutes ago

திடீரென கதவைத் திறந்த கணவன்… கள்ளகாதலனுடன் அந்த கோலத்தில் இருந்த மனைவி…. அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி… இறுதியில் நடந்த அதிர்ச்சி சமபவம்…!

திருமண உறவின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள், பல நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கும் குடும்பப் பிரிவுகளுக்கும் வழிவகுக்கின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

அக்டோபர் மாதம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி… தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு…. விஜய்க்கு மறைமுக பிரஷர்….!

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வரும் அக்டோபர் மாதம் சென்னைக்கு வருகை தரவுள்ளார்.…

1 மணத்தியாலம் ago