தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் தைப்பூச மகிமை.. இதெல்லாம் இந்த நாள்ல செஞ்சா அமோக வெற்றி தான்..

By John

Updated on:

தமிழ்க் கடவுளாம் முருகக் கடவுளுக்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசம் முதலிடத்தை வகிக்கிறது. வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி விழா, கார்த்திகை தீபம் என பலவாறு முருகனுக்கு விழாக்கள் இருந்தாலும் தைப்பூசம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தைப்பூச நாளில் நாம் புதிதாகச் செய்யப் போகும் அனைத்து காரியங்களும் ஜெயம் கொடுக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் அனைத்து முருகன் திருத்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். குறிப்பாக பழனி மலை முருகனுக்கு தைப்பூச விழாதான் திருவிழாக் காலமே.

இது குடும்பமாக இல்ல.. சினிமா பல்கலைக்கழகமா? தலைசுற்ற வைக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் உறவுகள் ரஜினி முதல் அனிருத் வரை நீளும் லிஸ்ட்

   

முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இருபத்தேழு நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூச நட்சத்திரம். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள். இந்நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் என்னென்ன செயல்கள் செய்யலாம் தெரியுமா?

Kavadi
kaavadi 1

முருகப்பெருமானுக்குரிய தைப்பூச நன்னாளில் குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல் போன்றவற்றை செய்து வைக்கலாம். தைமாதம் உத்தராயண புண்ணிய காலத்தின் ஆரம்பம். எனவே பௌர்ணமி தினத்தில் சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் ஆட்சி பெற்று இருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க தைப்பூசம் அமைகின்றது.

ரயிலில் மட்டும் பிடித்த சீட்டை முன்பதிவு செய்ய முடியாது ஏன் தெரியுமா? இதுக்குப் பின்னால இப்படி ஒரு அறிவியல் உண்மையா?

தைப்பூச நன்னாள் உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது.சிவசக்தி ஐக்கியம் இந்நாளில் தான் நிகழ்ந்ததாக ஐதீகம். மேலும் பதஞ்சலி வியாக்ரபாதர் இருவருக்கும் நடராஜ பெருமான் தில்லையில் திருநர்த்தன காட்சியை காட்டியது இந்த நாளில்தான். வாயு பகவான் வர்ணபகவான் அக்னிபகவான் சிவனின் அதீத சக்தியை உணர்ந்தது இந்தநாளில்தான்.

தைப்பூச நன்னாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் ஏடு தொடக்கம், புதிது உண்ணல், திருமண பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நல்ல காரியங்களை தொடங்கலாம். முருகனுக்கு காவடி எடுத்து நேர்த்திக் கடனை இந்த நாளில் தீர்க்கலாம்.

1662093544 5219

தைப்பூச விரத முறை :

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். மேலும் அன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

அன்றைய நாளில் சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

author avatar