இன்று வாரிசு அரசியல், வாரிசு நடிகர் என்று பேசிக் கொண்டிருக்கும் வேளையில் சத்தமே இல்லாமல் ஒரு குடும்பமே மினி சினிமா பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. அக்குடும்பம் தமிழகத்தின் பிரபலமான சினிமா ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பம் தான்அது. இவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இக்கட்டுரையை நிறுத்தி நிதானமாகப் படியுங்கள். அப்போது தான் புரியும்.
காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். பார்த்தசாரதியின் சகோதரி வசுந்தராதேவி அந்தக் காலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை. வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா.
ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த பத்திரிகையாளர் இவர். ராஜலட்சுமியின் தாத்தாவான ரங்கச்சாரி தான் இந்தியாவில் சென்ஸார் போர்டையே கொண்டு வந்தவர். ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி – சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார்.
ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.சிவாஜியை வைத்து அதிகப் படங்கள் எடுத்த தயாரிப்பாளர் இவர்தான். பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர்.
கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு மேல படியுங்க..!
கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் மோகன் லாலின் மகன் பிரணவ்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா. இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்து கொண்டு லதா ரஜினிகாந்த் ஆனார். சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர். லதாரஜினிகாந்தின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர். ராகவேந்திராவின் மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர்.
லதாவின் மகள் ஐஸ்வர்யா, இளம் நடிகர் தனுஷை மணந்தார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார்.லதா ரஜினிகாந்தின் இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம் என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார். தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்திருக்கிறார். அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே.
எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர். கே.சுப்பிரமணியத்தின் மகள் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம். கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளான பாமாவின் மகன்தான் நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர். ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜாவும் நடன இயக்குநர்தான். கிரிஜாவின் சகோதரிகள் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோரும் நடன இயக்குநர்களே.
ரகுராம் – கிரிஜா தம்பதியினரின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். என்ன உங்களுக்குப் புரிஞ்சுதா..?