அத்தனை வசதிகள் இருந்தும் அதை செய்யாத APJ.அப்துல் கலாம்.. குடியரசுத் தலைவர் மாளிகையை புரட்டிப் போட்ட நிகழ்வு..

By John

Updated on:

மாணவர்களின் கதாநாயகனும், ஏவுகணை நாயகனும் நமது நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது ஒரு விஷயத்தைத் தவிர்த்துள்ளார். அடிப்படையில் இஸ்லாம் மதத்தைத் தழுவினாலும் ஒரு மனிதனாக அப்துல்கலாம் செய்த செயல் அவர் ஏன் மக்கள் மனங்களில் நிற்கிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் ‘இப்தார்’ விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு. கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். அவரின் தனிச்செயலளாரை அழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். அந்த அதிகாரி 22 லட்ச ரூபாய் என்று கூற இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம்.

   

இது என்னடா டான்ஸ்-ன்னு நெனச்சவங்க கொஞ்சம் 22 வருஷத்துக்கு முன்னால போங்க.. அப்பவே சம்பவம் செய்த உலக நாயகன்

அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய அப்துல் கலாம். பின்னர் அவரை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.

Kalam 1
kalam 1

இப்பேற்பட்ட மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது நெகிழ்ந்து போனார் அந்த அதிகாரி. கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் ‘இப்தார்’ விருந்து அளிக்கப்பட்டதில்லையாம்.

மேலும் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் ஏற்பாடு செய்து தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தையும் அப்துல் கலாம் வழங்கி விட்டாராம்.

Kalam 2
kalam 2

காலை அகற்றச் சொன்ன டாக்டர்.. முருகன் அருளால் கிருபானந்தவாரியாருக்கு நிகழ்ந்த அதிசயம்

மேலும் ஒருவர் கூட அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை. மேற்கண்ட தகவலை அப்துல்கலாமின் தனிச்செயலர் பி.எம். நாயர் ‘கலாம் எபெக்ட்’ என்ற நூலில் தெரிவித்திருக்கிறார்.

author avatar