கடந்த சில நாட்களுக்கு முன் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. அவரது பேச்சில் ஒரு வித கோபமும், சமுதாயத்தின் மீதான ஆற்றாமையும் வெளிப்பட்டது. அந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டார் அந்தப் பெண் எம்.பி.
அடுத்த சிறிது நேரத்தில் அவர் யார்? அவர் பேசியது என்ன மொழி, ஏன் அவ்வாறு பேசினார் என அனைத்திற்கும் விடை காண உலகமே இணையத்தை உலாவிக் கொண்டிருந்தது. உலகத்தையே அதிர வைத்த அந்தக் கன்னி பேசிய கன்னிப் பேச்சு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதுவரை ஒலிக்காத குரலாக ஓங்கி ஒலிக்க ஒட்டுமொத்த உலகத்தையும் தன்பக்கம் உற்றுநோக்க வைத்தார்.

#image_title
காலை அகற்றச் சொன்ன டாக்டர்.. முருகன் அருளால் கிருபானந்தவாரியாருக்கு நிகழ்ந்த அதிசயம்
நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியினரின் பாரம்பரிய நடனமான ஹக்கா நடனம் மற்றும் பாடலுடன் சேர்ந்து கை மற்றும் உடலை அசைத்துப் பேசியது, அந்த நாட்டு நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறுவயதில் இருந்தே அடக்குமுறைகளைச் சந்தித்து வந்த மாவோரி இனத்தைச் சேர்ந்த மைபி-கிளார்க், மாவோரி மக்களின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது தான் என உறுதியாக இருந்த அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உலகம் முழுவதும் உள்ள அடக்கு முறைக்கு எதிராக ஓங்கி ஒலித்த குரலாக இருந்தது.
கடந்த 170 ஆண்டுகால நியூசிலாந்து அரசியலமைப்பு வரலாற்றில் முதன்முதலாக 21-வயதே ஆன பெண் ஒருவர் இளம் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தன் முதல் பேச்சிலேயே ஐ.நா.சபை வரை அதிர வைத்தார்.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் மைபி-கிளார்க் பேசியபடி ஆடிய மாவோரி பழங்குடி மக்களின் பூர்வீக நடனத்தை நமது உலகநாயகன் கமல்ஹாசன் 22 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னுடைய பாடல் ஒன்றில் ஆடியிருப்பார்.
படம் நல்லா ஓடணும்னு இயக்குனருடன் சேர்ந்து மொட்டை அடித்த AVM. சரவணன்.. படம் ஓடுச்சா இல்லையா..?

#image_title
கமல்ஹாசன், சிம்ரன் நடிப்பில் கடந்த 2002-ல் மௌலி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பம்மல் கே சம்பந்தம். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் வரும் சகலகலாவல்லவனே என்ற பாடலில் கமல்ஹாசன், சிம்ரன் மாவோரி மக்களின் நடனத்தை ஆடியிருப்பார்கள். அப்போது இது என்னடா நடனம் என்று குழம்பிப் போயிருந்தவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
தற்போது மைபி கிளார்க்-ன் இந்த உரையையும், பம்மல் கே சம்பந்தம் படப்பாடலையும் ஒப்பிட்டு உலக நாயகன் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.