படம் நல்லா ஓடணும்னு இயக்குனருடன் சேர்ந்து மொட்டை அடித்த AVM. சரவணன்.. படம் ஓடுச்சா இல்லையா..?

By Archana

Published on:

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்றால் அது ஏ.வி.எம். சென்னையின் ஒரு அடையாளம் என்றால், அது ஏ.வி.எம் உருண்டை என்றும் கூட சொல்லலாம். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப் பட்டது ஏ.வி.எம் திரைப்பட நிறுவனம். ஏ.வி.எம் தயாரிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றால் நிச்சயம் அது வெற்றியாகத் தான் இருக்கும். இவரது மகன் சரவணனும், தனது தயாரிப்பு நிறுவனத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றார். 1935-ம் ஆண்டு அல்லி அர்ஜூனா என்ற படத்தின் மூலம் ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது.

maxresdefault 8

தமிழ் திரையுலகின் பாரம்பரியம் மிகுந்த ஏ.வி.எம் பட நிறுவனம், 75 வருடங்களில் 175 படங்களை தயாரித்து சாதனை புரிந்திருக்கிறது. இப்படி பல படங்களை எடுத்து சாதனை புரிந்த ஏ.வி சரவணன், இத்தனை ஹிட் படங்களை கொடுத்ததற்கு காரணம், அவரது டெடிகேஷன் என்றும் சொல்லலாம். அதற்கு உதாரணமாக இயக்குநர் சரண் பகிர்ந்த சுவாரஸியமான விஷயத்தை பார்க்கலாம். ஒவ்வொரு கோடையிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பாக பார்த்து குதூகலிக்கும் விதமாக படங்களை தயாரித்து வெளியிடுவதை தவறாமல் கடைப்பிடித்து வந்த ஏவிஎம் நிறுவனம் 2002ஆம் ஆண்டில் அப்படியொரு பேமிலி எண்டர்டெயினர் படமாக ஜெமினி படத்தை உருவாக்கியிருந்தது.

   
maxresdefault 9

காமெடி, ஆக்‌ஷன், பாடல் சென்டிமெண்ட் என கமர்ஷியல் படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் சேர்த்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சரண். விக்ரம், கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், வில்லனாக மலையாள நடிகர் கலாபவன் மணி தமிழில் அறிமுகமானார். சுமாரான வெற்றியை பெற்ற ஜெமினி படம் 23 கோடி ரூபாய் வசூல் பெற்றது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு படக்குழுவினருடன் படத்தின் ரீல்ஸை எடுத்துக் கொண்டு ஏ.வி.சரவணன் திருப்பதி சென்றுள்ளார். அங்கு ஜெமினி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மொட்டை அடித்துக் கொண்டாராம் ஏ.வி.சரவணன்.

MV5BMDNlYWU2OWQtYTdmMC00N2EyLWI3NDQtMzYwMGExOTk0ODk2XkEyXkFqcGdeQXVyNDc2NzU1MTA V1 FMjpg UX1000
author avatar
Archana