மேடையில் சிம்புவுடன் நடந்த அந்த சண்டை… 16 வருடங்களுக்கு பின்பு உண்மையை உடைத்த நடிகர் பப்லு..

By Archana on தை 22, 2024

Spread the love

பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி, டான்ஸ், பாட்டு நிகழ்ச்சிகளில் நடைபெறும் சண்டை, சச்சரவுகள் உண்மையா? அல்லது பேசி வைத்து செய்கிறார்களா என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் இருக்கும். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண் திரைப்படத்தின் மூலம், தனது டி.ஆர்.பியை உயர்த்திக் கொள்வதற்காக சில சேனல்கள் பேசிவைத்து சில விஷயங்களை செய்வதாக காட்டியிருப்பர். சமூக வலைதளங்கள் அதிகரித்து வரக் கூடிய நிலையில், தொலைக்காட்சிகளில் பழைய நினைவுகளை பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

#image_title

அப்படி 16 வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில், நடிகர் சிம்பு நடுவராக கலந்து கொண்டிருந்தப் போது, போட்டியாளராக இருந்த நடிகர் பப்லுவுடன் ஒரு சிறிய சண்டை ஏற்பட்டது. அந்த சண்டை குறித்து பப்லு விளக்கம் கொடுத்திருக்கும் நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ்கள் எல்லோருக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஆகத்தான் இருக்கும். இது விஜய் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது எனலாம்.

   
   

#image_title

 

ஜோடி நம்பர் 1 சீசனில் உமா ரியாஸ் மற்றும் பப்லு பிரித்திவிராஜ் இருவரும் சேர்ந்து போட்டியாளர்களாக களமிறங்கினர். அந்த நிகழ்ச்சியின் நடுவராக சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர். அப்போது ஒரு எபிசோடில் பப்லு டான்ஸ் சரியாக ஆடவில்லை என்று சிம்பு கூற அங்கு சண்டை பெரிய அளவில் வெடித்தது. அப்போது என்னை எப்படி சிம்பு அப்படி சொல்லலாம் என்று பப்லு எகிற அங்கிருந்த எல்லோரும் சமாதானம் செய்து பார்த்தனர். ஆனாலும் சிம்பு மற்றும் பப்லு இடையே பெரிய அளவில் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் சிம்பு உடைந்து அழவே செய்திருந்தார். அப்போது ”எனக்கு நடிக்க தெரியாது” என்று அந்த டயலாக் தற்போது வரையிலும் ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது.

#image_title

இந்த சண்டை உண்மையாகவே நடந்தது தானா? என பப்லுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், இல்லை அது உண்மையாக நடந்தது இல்லை. பேசி வைத்து நடந்தது என கூறியிருக்கிறார். இவர்கள் பேசி வைத்தது உமா ரியாஸுக்கே தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை உமா ரியாஸுக்கு அது தெரிந்திருந்தால், அந்த சண்டை உண்மையானது போல் இருந்திருக்காது என்பதனால் அவரிடம் அதனை சொல்லவில்லை எனக் கூறியிருக்கிறார் பப்லு.