பிரேமம் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி; இவரது தங்கை பூஜா கண்ணன் சில நாட்களுக்கு முன்பாக காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்; அதிலிருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது பூஜா கண்ணன் நிச்சயதார்த்த போட்டோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவி கவர்ச்சி இல்லாமலும், எந்தவித அழகு சாதனப் பொருட்கள் இல்லாமலும் தன் நடிப்பு திறமையின் மூலமும் அழகாலும் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். முதல் படமான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை திரட்டினார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரை தேடி பல படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இவரை தொடர்ந்து, நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘சித்திரை செவ்வானம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவரும் பல படங்களில் நடிப்பார் என ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு படத்தை மட்டும் நடித்து திரையுலகில் இருந்து விலகினார். ஆனால், எப்போதும் சமூக வலைத்தளங்களில் அசிடிவாகவே இருந்து வந்து தந்து வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பதிவிட்டு வந்துள்ளார்.

தற்போது, சில நாட்களுக்கு முன்பாக பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரைம் பார்ட்னராக இருந்தவர் இனி லைஃப் பார்ட்னராக மாறி உள்ளார் என்று புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே தனது காதலனை அறிமுகம் படுத்தினார். இந்நிலையில் நடிகை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

