‘இந்தியா அனைவருக்குமான நாடு’… ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று, தனுஷ் பட நடிகை வெளியிட்டு பதிவு.. வைரல்..

By Mahalakshmi on தை 22, 2024

Spread the love

நடிகை பார்வதி  தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில்  திரைபிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த  போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை பார்வதி  தமிழ், மலையாளம், கன்னடம்  போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் “அவுட் ஆப் சிலபஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு 2008 ல் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான ‘ஃபிலிம் பேர் விருதினை’ பெற்றுள்ளார்.

   

 

மேலும், இவர் நோட்புக், கடவுளின் நரகம், சார்லி உயரே போன்ற பல மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தமிழ் திரையுலகில் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’ ,’உத்தம வில்லன்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘சிவரஞ்சினியும் சில பெண்களும்’ இறுதியாக ‘தங்கலன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது, நடிகை பார்வதி தனது முகநூல் பக்கத்தில் ராமர் கோவில் செல்வது குறித்து போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் நாம அனைவரும் இந்திய மக்கள் ; இந்தியா மதசார்பற்ற நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.