காலை அகற்றச் சொன்ன டாக்டர்.. முருகன் அருளால் கிருபானந்தவாரியாருக்கு நிகழ்ந்த அதிசயம்

By John

Updated on:

பிரபல இந்து மத ஆன்மீக சொற்பொழிவாளரான கிருபானந்தவாரியாரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தனது ஆன்மீகக் கருத்துக்களை மக்களிடம் பரப்பி புகழ் பெற்றவர்.  முருகக் கடவுளின் மீது அளவற்ற பற்று கொண்டு தீவிர முருக பக்தராக இருந்து பின்னர் ஆன்மீக சொற்பொழிவாளராக மாறியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-க்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டம் கொடுத்தது இவரே.

தன்னுடைய 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். 18 வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கி மக்களை நல்வழிப்படுத்தியவர். கிருபானந்த வாரியார் தீவிர முருக பக்தராக மாறியதற்கு காரணமான ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

   
Kripananda variyar swamigal

தனது ஆன்மீகப் பொன்மொழிகளால் மக்களை நல்வழிப்படுத்தி ஆன்மீகப் பாதையில் செல்ல வித்திட்டவர் கிருபானந்த வாரியார். னார் கிருபானந்த வாரியார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற ரஜினிகாந்திற்கு முதல் வரிசையில் சீட் இல்லை.. ஆனால் அந்த பெரிய ஜாம்பவான் பக்கத்தில் கிடைத்த இருக்கை ..

இவ்வாறு இளமையிலேயே ஆன்மீகத்தின்பால் நாட்டம் கொண்டு பின்னாளில் சிறந்த முருக பக்தராகவும், உலகின் தலைசிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் விளங்கினார்.

கிருபானந்த வாரியார் சிறுவனாக இருக்கும் போது அவரது காலில் புண் ஏற்பட்டது. அதனைக் கண்டு கொள்ளாமல் விட நாள் பட்ட அந்தக் காயம் உள்ளுக்குள் பெரிதாகிப் போனதால், அவரால் வலி பொறுக்க முடியவில்லை. மருத்துவமனையில் காட்டியபோது டாக்டர்கள், “உள்ளே செப்டிக் ஆகி விட்டது, உடனே காலை எடுக்க வேண்டும், இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.

swami Kiruba
swami kiruba 1

மேலும் காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவமனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும் எனக் கூறியதைக் கேட்டு கிருபானந்த வாரியார் தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவரது மாத சம்பளமே 15 ரூபாய் தான். 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனது குடும்பம்.

70 ஏக்கர் பரப்பளவு.. 2100 கிலோ எடையு மணி.. மிரள வைக்கும் அயோத்தி ராமர் கோவில்.. மொத்த செலவு எவ்ளோ தெரியுமா..?

ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால், தன்னைப் படைத்த கடவுளுக்கே அந்தக் காலை கொடுத்து விடுவோம் என நினைத்தார். பாதிக்கப்பட்ட தன்னுடைய கால் தேயும் வரை முருகப்பெருமான் ஆலயத்தை சுற்றுவோம். இவ்வாறு நினைத்த அவர் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று கணக்கே இல்லாமல் காலை மாலை என தினமும் கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தார்.

சில மாதங்களுக்குப் பின் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக, அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில், தானே ஆற ஆரம்பித்த புண், இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. அன்று எடுத்த முடிவு தான் அவரை தீவிர முருக பக்தராக மாற்றியது. இனி என் வாழ் நாள் முழுதும், முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில், அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக, பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

muruga bir today

கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன் புகழ் பாடியே தன்னுடைய ஆன்மீக வாழ்க்கையை நகர்த்தினார். மேலும் கிருபானந்த வாரியார் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் அறியாத தகவல். அவை நவக்கிரக நாயகி, துணைவன், திருவருள் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த மிருதங்க சக்கரவர்த்தி ஆகியவை ஆகும்.