ஒரு படத்திற்கு 2.5 கோடியா….? டாப்பில் போகும் கவின்…. வெளியான தகவல்….!!

By indhuramesh on மே 3, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின் மூலமாக திரையில் என்ட்ரீ கொடுத்த கவின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக மிகவும் பிரபலமானார்.

   

அதன் பிறகு ஒரு சில படங்களில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடையே கூடுதல் பிரபலமானார். அதனை தொடர்ந்து சத்ரியன், லிஃப்ட், டாடா என கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ஆனால் கவின் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாகவும் அந்த சம்பளத்தை கொடுக்க மறுத்தால் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் தகவல்கள் வெளியானது.

   

இதனிடையே சமீபத்தில் இவரது நடிப்பில் ஸ்டார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கவின் மற்றும் பட குழுவினரிடம் செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர். அப்போது கவினிடம் படத்தில் நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த கவின் முதல் முதலில் கனா காணும் காலங்களில் நடித்த போது ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அதன் பிறகு ஆறு வருடம் கழித்து அனுபவம் கிடைத்த பிறகு 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறி மார்க்கெட்டிற்கு தகுந்தாற்போல் தான் அவர் சம்பளம் கேட்பதாக கூறியுள்ளார்.