அயோத்தி ராமர் கோவிலில் இன்று பெருவிமர்சையாக கும்பாபிஷேக திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் விழாவில் பங்கேற்க படையெடுத்து திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்கள். இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதில் ரஜினிகாந்த் அருகே லதா ரஜினிகாந்த்திற்கு நாற்காலி ஒதுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பால ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் பால ராமரின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தப் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் மற்றும் உத்தரபிரதேச அரசு சார்பில் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே நேரில் விழாவில் பங்கேற்க முடியும். இந்த அழைப்பிதழ் பெற்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி, மருமகன் , அண்ணன், பேரக்குழந்தைகள் என்று குடும்பத்துடன் நேற்று அயோத்திக்கு புறப்பட்டார்கள்.
மேலும், இந்த விழாவில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம்சரண், ரன்பீர் கபூர், அபிஷேக் பச்சன், ஆலியா பட், கங்கனா ரனாவத், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் முன் வரிசையில் அமர நாற்காலி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் அருகே லதா ரஜினிகாந்த் நாற்காலி ஒதுக்கப்படவில்லை. லதா ரஜினிகாந்த் சிறிது பின்னாடியே நாற்காலி ஒதுக்கப்பட்டு இருந்தது.
மேலும், ரஜினிகாந்த் அருகே உள்ள நாற்காலியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ந இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒருவருக்கொருவர் ரசிகர் என்பதால் பேசிக்கொண்டே இருந்தார்கள்; இருப்பினும் ரஜினிகாந்த் கோவில் நிர்வாகத்திடம் ஏதோ முறையிட்டது போல புகைப்படம் இணையத்தில் வெளியானது.
மேலும் முன் வரிசையில் ரஜினிகாந்த் இருப்பதை கண்ட முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ரஜினிகாந்த் அருகே வந்து கைகூப்பி வணக்கத்தை தெரிவித்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் திறம்பட நடித்து தமிழ்நாடு அல்ல இந்தியா முழுவதும் ஃபேன்ஸ் இருக்கிறது என எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.