தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் சென்னை 600028, சுப்ரமணியபுரம் படங்களில் நடித்தார். இதில் சுப்ரமணியபுரம் ஜெய்க்கு பெரிதும் பெயர் பெற்று கொடுத்தது.

#ஜெய்
அதனைத் தொடர்ந்து வாமனன், கோவா, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என 2002-ல் தொடங்கி 2024 வரை பல படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று இரண்டு வெப் சீரிஸ்களிலும் ஜெய் நடித்துள்ளார். ஆனால் இன்று வரை ஜெய் சிங்கிளாக தான் இருக்கிறார்.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஜெய் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது நடிகர் பிரக்யா கழுத்தில் மஞ்சள் கயிற்றுடனும் ஜெய் கையில் பாஸ்போர்ட்டுடனும் இருக்கும் படியான புகைப்படம் தான் அது.
அது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சிறிது மகிழ்ச்சியையும் கொடுத்தது என்று சொல்லலாம். ஆனால் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்த ரசிகர்கள் அது படப்பிடிப்பு தளத்தில் எடுத்தது என்றும் படத்தில் வரும் காட்சி தான் அந்த புகைப்படம் என்றும் புரிந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அது ஜெய்க்கு திருமணம் முடிந்து விட்டதோ என்று அவரது ரசிகைகள் கவலைப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் படியான புகைப்படம் தான். அதாவது அந்த புகைப்படத்தில் தான் 90’ஸ் கிட் என்றும் பெண்கள் கவலைப்பட வேண்டாம், அதோடு தான் சிங்கிள் என்றும் ஜெய் குறிப்பிட்டிருந்தார்.
