ஒரு மண்டலம் இத பக்தியோட செஞ்சு பாருங்க.. எப்படிப்பட்ட கடனை அடைக்கவும் வழி பிறக்கும்..

By John

Updated on:

Loan

நடுத்தர வர்க்கத்தினருக்கு மாதமானால் EMI, வாடகை என பல்வேறு வகைகளில் பணத்தேவை வருகிறது. சில நேரங்களில் சமாளித்து விட்டாலும், பல நேரங்களில் அடுத்தவர் கையைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சிலசமயங்களில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கி தவித்துக் கொண்டிருப்போம். பணக் கஷ்டம் தீர எளிய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று ஆசையைக் குறைப்பது, மற்றொன்று கடினமாக உழைத்து முன்னேறுவது. இவை எல்லாவற்றையும் விட பிரார்த்தனையும் கை கொடுக்கும். அதற்குச் சில பரிகாரங்கள் உள்ளன.

download 3

முதலில் கடன் பிரச்சனை உள்ளவர்கள் சிவன் கோவில்களில் இருக்கும் மடபள்ளிக்கு கல் உப்பை தானமாக கொடுப்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. இதை வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் வாங்கி கொடுப்பது நல்லது.

   

அடுத்ததாக பட்டர் பாடிய அபிராமி அந்தாதி பாடலில் மொத்தமாக நூறு பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களையும் தினம்தோறும் உச்சரிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான்.

இதனால் இந்த நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை இந்த ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். அபிராமி அந்தாதியில் அம்மனை நினைத்து துதித்து பாடும் அந்தப் பாடல் உங்களுக்காக இதோ.

அபிராமி அந்தாதி நூற்பயன்:
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை,புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கைசேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

படுத்த படுக்கையாய் கிடந்த எம்.ஜி.ஆரைத் தேற்றிய அந்தப் பாடல்.. தமிழகத்தையே உருக வைத்த பிரார்த்தனை

இப்பாடலைப் பாடுவதற்கான முறைகள் ஒன்றும் கடினமான விஷயம் இல்லை. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் முகம் கை கால்களை கழுவிக்கொண்டு அம்பாளை நினைத்து இந்தப் பாடலை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

100 rupee
100 rupee

அதன்பின்பு கடன் தீருவதற்கு என்று அபிராமி அந்தாதியில் பிரத்தியேகமாக ஒரு பாடல் உள்ளது.  கடன் தீர:
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

முதலில் அபிராமி அந்தாதி நூற்பயன் பாடலை மூன்று முறை பாடி விட்டு பின்பு, கடனை தீர்ப்பதற்கான பாடலையும் மூன்று முறை பாடிவிட்டு மனதார இறைவனை நினைத்து கடன் பிரச்சனை விரைவாக தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து தொடர்ந்து 48 நாட்கள் செய்து வரும்போதே கடன் பிரச்சனைக்கான ஒரு நல்ல தீர்வு உங்களுக்கு கிடைத்துவிடும்.

பிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விட்டாலும் இந்த பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியமும் நமக்கு அதிகரிப்பதை நம்மால் கண்கூடாக உணர முடியும் என்பது உண்மை.

author avatar