Connect with us

யார் சொல்லியும் மாற்றாத அஜித் பட இயக்குனர்… இன்றைக்கும் பேர் சொல்லும் க்ளைமேக்ஸ்!

CINEMA

யார் சொல்லியும் மாற்றாத அஜித் பட இயக்குனர்… இன்றைக்கும் பேர் சொல்லும் க்ளைமேக்ஸ்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு அஜித்துக்கு மிக முக்கியமான் ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் அவர் நடித்த எல்லா படங்களும் ஹிட்டாகின. அமர்க்களம் என்ற ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்த அஜித் உடனடியாக மென்மையான குடும்பக் கதையான முகவரி படத்தில் நடித்தார்.

   

இந்த படத்தில் இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞனாக அவர் நடித்திருப்பார். தன்னுடைய கனவுக்காக காதலை தியாகம் செய்வார். ஆனால் தன்னுடைய குடும்பமா அல்லது இசையா என்ற நிலை வரும் கனவை விட்டு விட்டு குடும்பத்தைக் காக்க வேலைக்கு செல்வார். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தனது கனவை வெல்வது போல க்ளைமேக்ஸை உருவாக்கி இருப்பார்கள்.

 

படம் பார்த்த ரசிகர்களுக்கு அந்த நெகட்டிவ் க்ளைமேக்ஸ் பிடிக்கவில்லை. அஜித் ஜெயிப்பது போல மாற்றவேண்டும் என கருத்துகள் வந்துள்ளன. ஆனால் அஜித்தும் இயக்குனர் வி இசட் துரையும் இந்த க்ளைமேக்ஸே இருக்கட்டும் என உறுதியாக இருந்துள்ளனர். அப்படி இருந்தும் படம் 175 நாட்கள் ஓடி அஜித்தின் கேரியரில் ஒரு முக்கியமானப் படமாக அமைந்தது. இன்றளவும் சிலாகித்துப் பேசப்படும் ஒரு படமாக முகவரி உள்ளது.

Continue Reading
To Top