‘சிறகடிக்க ஆசை’ அண்ணாமலையின் நிஜ மனைவி மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்..

By Mahalakshmi

Published on:

80 களில்  சிறந்த நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வந்தவர் நடிகர் சுந்தர்ராஜன்;  இவர் பிரபல  தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை”  சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சுந்தரராஜனின் மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் குடும்பப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

   

நடிகர் சுந்தர்ராஜன் திரைத்துறையில் நடிகராக  அறிமுகமான ஒரு வருடத்திலேயே  “பயணங்கள் முடிவதில்லை”  திரைப்படத்தை இயக்கி சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் மோகன் நடிப்பில் வெளியான இந்த படம் சூப்பர்  ஹிட்டாக மாறி பாக்ஸ் ஆபிஸில் 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இதனை தொடர்ந்து பல படங்களை இயக்கியனார்  நடிகர் சுந்தர்ராஜன்.

25 கும்  மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள நடிகர் சுந்தர்ராஜனின்  பல படங்கள் வெற்றி படங்களாக பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளது. மேலும் இவர் இயக்கத்தில் வெளியான  24 படத்தில்  இசையமைப்பாளராக புகழ்பெற்ற இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா துறையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் வலம் வந்த  நடிகர் சுந்தர்ராஜன் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில், இவரின் மனைவி, இரு மகன்கள் மற்றும் மருமகளுடன் இணைந்த குடும்ப போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.  இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்ஸ் மட்டும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi