குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

By Mahalakshmi on மே 7, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், குக்கு வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மேலும் பிரபலம். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் மிகவும் பாப்புலர். இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றது. ஐந்தாவது சீசன் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது.

   

முன்பு போல் இல்லாமல் இந்த முறை புதிய கோமாளி மற்றும் நடுவர்கள் என்று கலகலப்பாக சென்று கொண்டிருக்கின்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்து வந்தனர். ஆனால் இந்த முறை வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி அவருக்கு பதிலாக புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கின்றார்.

   

 

இவர் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும் இந்த முறை குக்குகளாக திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தொகுப்பாளினி பிரியங்கா, நடிகர் வசந்த், நடிகை ஷாலினி ஜோயா, சுசித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சீசனில் முகம் தெரிந்த நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையில் இருந்தும் போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.

அதன்படி, ஷாலின் சோயா- ரூ. 10,000 , அக்ஷய் கமல்- ரூ. 10,000, திவ்யா துரைசாமி- ரூ. 12,000 , ஸ்ரீகாந்த் தேவா- ரூ. 10,000, பூஜா வெங்கட்- ரூ. 9,000, இர்பான்- ரூ. 15,000, பிரியங்கா- ரூ. 18,000, விடிவி கணேஷ்- ரூ. 15,000, சுஜிதா- ரூ. 18,000, வசந்த்- ரூ. 10,000 என சம்பளம் வாங்கி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.