அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

By Mahalakshmi on மே 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் தான் என்ற அளவுக்கு பெரும் புகழையும் பெற்றிருந்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் சுபாஸ்கரன். வசூல் ரீதியாக பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு முத்திரையை பதித்து வைத்திருக்கின்றது லைக்கா நிறுவனம்.

ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் அவர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யாத காரணத்தினால் பெரும் பொருளாதார நெருக்கடியில் லைக்கா நிறுவனம் சிக்கித் தவிர்த்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐடி ரெய்டில் சிக்கி பல சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதால் லைக்கா நிறுவனம் மிகப்பெரிய சிக்கலில் இருக்கின்றது.

   

   

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கின்றது. இப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகவே கடந்த ஆண்டு இறுதியில் தான் துவங்கப்பட்டது.  தற்போது வரை இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பட சூட்டிங் தாமதம் ஆவதற்கு லைகா நிறுவனம் தான் காரணம் எனவும் கூறி வருகிறார்கள்.

 

ஏனென்றால் லைக்கா நிறுவனம் கமல் நடிப்பில் தயாராகும் இந்தியன் 2 திரைப்படத்தையும், ரஜினி நடிப்பில் தயாராகும் வேட்டையின் திரைப்படத்தையும் தயாரித்து வருகின்றது. இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜூன் மாதம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளதால் மற்ற மொழி வெர்ஷன்கள் இன்னும் தயாராகவில்லையாம்.

இதனால் படத்தின் தேதி தள்ளி போகலாம் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திலிருந்து வரும் வருமானத்தை வைத்து தான் மற்ற படங்களுக்கு செலவழிக்கலாம் என்று முடிவில் இருந்தது லைக்கா நிறுவனம். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அஜித் நேரடியாக தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் பேசி இருக்கிறார். அனைத்து ஏற்பாடு செய்துவிட்டு ஷூட்டிங் நடத்த முடியும் என்று முடிவாக தெரிந்தால் தன்னிடம் கூறுமாறும்.

அதுவரை தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளாராம். அதற்குள் தான் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் பேசியிருக்கிறார். ஏனென்றால் நடிகர் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அட்லி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில் தற்போது அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை விட்டு அடுத்த திரைப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார் என்று கூறப்படுகின்றது.