நடிப்பதை தாண்டி Badmitton விளையாட்டில் கலக்கும் பிரபல நடிகை.. வெற்றிக்கோப்பையுடன் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்..

By Mahalakshmi

Updated on:

நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  2016 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அவர் டால்பின் ஸ்போட்ஸ் நிறுவனம் நடத்தும் இறகுப்பந்து  போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பையை வென்று  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

   

நடிகை நிவேதா  2020 ம் ஆண்டு டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் இறுதியாக நடித்துள்ளார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இருந்த நிவேதா  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி மாடல் உடைகள் அணிந்தும் ,  தன் வாழ்வில் நடிக்கும் பர்சனல் விஷயங்களை போட்டோ மற்றும் வீடியோ மூலம் அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த வகையில், நடிகை நிவேதா இறகு பந்து விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்த நேரத்தில், மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான டால்பின் ஸ்போட்ஸ் நிறுவனம் நடத்தும்  இறகு பந்து போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்; அந்த போட்டியில் வெற்றி பெற்று  கோப்பையை வென்றுள்ளார். அதனுடன் எடுத்த  புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு  நடிகை நிவேதாவின் ரசிகர்கள் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த வண்ணம் இருகிறார்கள். அவருக்குள் இவ்வளவு திறமை ஒளிந்து இருக்கிறதா என்று பலரும் கமெண்ட் செய்தும் லைக்ஸ் செய்தும் வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi