நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

By Priya Ram on மே 2, 2024

Spread the love

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து பாண்டவர் பூமி படத்தில் இடம் பெற்ற தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் என்ற பாடல் மூலம் சினேகன் பிரபலமானார்.

   

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராகவும் பாடலாசிரியராகவும் இருக்கிறார். சினேகன் கடந்த 2021-ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகையான கன்னிகா ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுவரை இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

   

 

இந்த நிலையில் சினேகனும் அவரது மனைவி கன்னிகாவும் இணைந்து சினேகம் என்ற புதிய பிராண்ட் ஹெர்பல் ஆயில் பிசினஸை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே அழகு சாதன பொருட்களை தனது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்கிறார். அடுத்ததாக நடிகை கன்னிகா தனது கணவருடன் இணைந்து புது தொழிலை ஆரம்பித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)