ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து சிம்போனி இசைக்கோளத்தை அமைத்துக் காட்டியவர் இசைஞானி இளையராஜா. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தை சேர்ந்த இவரின் இயற்பெயர் ராசையா.
தமிழகத்தில் ஒரு தாய் தனது குழந்தைக்கு பாடும் தாலாட்டு தொடங்கி அனைத்து வடிவத்திலும் இசையை போட்டு தமிழர்களின் பெருமையை பறைசாற்றிய இசை மேதை. அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய இசைஞானி தமிழர் வாழ்ந்த எல்லா இடங்களிலும் தென்னிசையாய் நுழைந்து மக்களை தனது இசையால் கட்டிப் போட்டவர். இசைஞானி இளையராஜாவின் பாடல்களை கேட்டாலே அவ்வளவு இனிமையாக இருக்கும் என்று பலரும் கூறுவார்கள்.
இப்படி இவரின் புகழை கூறிக் கொண்டே போகலாம். இசைஞானி என்றால் பலரும் கோபக்காரர், திமிர் பிடித்தவர் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் பல படங்களுக்கு சம்பளமே வாங்காமல் கூட இசையமைத்து கொடுத்து இருக்கின்றார். பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முன்னேறுவதற்கு ஒரு உதவியாக இருந்திருக்கின்றார். தற்பொழுது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கு இசையமைத்து வருகின்றார்.
சமீபத்தில் காப்புரிமை தொடர்பான பிரச்சனை பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது பாடலுக்கு முழு உரிமை இசையமைப்பாளருக்கு என்று இளையராஜா உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரணை செய்த நீதிபதிகள் பாடல் ஆசிரியரும் இப்படி உரிமை கூறினால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இப்படி ஒரு பிரச்சனை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இளையராஜா தற்போது ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “எல்லோருக்கும் வணக்கம். தினமும் நான் கேள்விப்படுகிறேன். என்னை பற்றி நிறைய வீடியோக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்று தனக்கு வேண்டியவர்கள் கூறுவார்கள். ஆனால் அதில் நான் கவனம் செலுத்துவது கிடையாது. அது என்னுடைய வேலை கிடையாது. என்னுடைய வேலையை கவனிப்பது தான் என்னுடைய வேலை.
நான் என் வழியில் ரொம்ப கிளியரா சுத்தமாக போயிட்டு இருக்கேன். நீங்கள் இப்படி என்னை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலே கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன். ஒரு பக்கம் படத்தின் பாடல்கள் மறுபக்கம் நிகழ்ச்சிகள் விழாக்களுக்கு சென்று தலையை காட்டி விட்டு ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்து விட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை எனக்கு சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கின்றேன்” என்று மிகவும் பெருமையாக பேசி இருந்தார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024