Connect with us

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

CINEMA

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ் புகார் அளித்திருந்த நிலையில் அது குறித்து பேட்டி ஒன்றை அளித்து இருக்கின்றார் ஐசரி கணேஷ். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய சிம்பு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார்.

மாநாடு திரைப்படத்தை தயாரித்திருந்த வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு ஒன்பதரை கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் முன் பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021 ஆம் ஆண்டு வாங்கி இருக்கிறார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

   

 

கொரோனா குமார் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிகர் சிம்பு நடித்து வரும் நிலையில் அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் சிம்பு-மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அந்த படத்தில் நடிக்க கூடாது எனவும் அவர் கூறியிருந்தார்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ் கூறியிருந்ததாவது “ஹிப் ஹாப் ஆதியின் 25வது திரைப்படம் வெளியாகின்றது. இதனை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சிம்பு அடுத்த திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார். அது குறித்து புகார் அளித்திருந்த நிலையில் அது என்ன நிலைமையில் இருக்கின்றது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் புரொடியூசர் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார். மேலும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று கூறியிருந்தீர்கள். அது குறித்து பதில் அளித்த ஐசரி கணேஷ் தெரிவித்ததாவது அந்த மாதிரி படத்தில் நடிக்க கூடாது என்றெல்லாம் நான் கூறவில்லை. தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு தான் உள்ளது. எனக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் கூறினேன். அவர்களும் படம் பண்ணிக் கொடுக்கிறேன்” என்று கூறி விட்டார்கள் என்று பேசியிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by NewsTamil 24×7 (@newstamiltv24x7)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top