Connect with us

CINEMA

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். அதைத்தொடர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், சினேகா லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

   

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இது திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படம் குறித்த கதை தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாக நடிகர் விஜயின் ஒரு திரைப்படம் பாதி முடிந்த உடனே அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகிவிடும்.

ஆனால் தற்போது கோட் திரைப்படம் முடிய உள்ள நிலையில் அடுத்த திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கின்றது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்த தேர்வே மிகப்பெரிய லிஸ்ட் ஆக போய்க் கொண்டே இருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் கார்த்திக் முதல் வெற்றிமாறன் வரை பலரின் பெயர் அடிபட்டது.

கடைசிவரை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகவில்லை. எச் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை முதலில் டிவிஎன் என்டர்டைன்மென்ட் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், விஜய் 250 கோடி சம்பளம் கேட்டதால் அந்த நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகியது.

அதை தொடர்ந்து டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளரான கேவிஎன் தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தளபதி 69 திரைப்படம் மக்களுக்காக போராடும் தலைவனின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதற்கான இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகளும் முடிந்து விட்டதாகவும் விஜய் கடைசி படத்தை அரசியல் படமாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top