Connect with us

LIFESTYLE

ரயிலில் மட்டும் பிடித்த சீட்டை முன்பதிவு செய்ய முடியாது ஏன் தெரியுமா..? இதுக்குப் பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்கா..?

இன்று தியேட்டர், ஹோட்டல், பஸ், விமானம் என அனைத்து இடங்களிலும் நமக்குப் பிடித்த இடத்தை அல்லது சீட்டை முன்பதிவு செய்து கொள்கிறோம். ஆனால் ரயிலில் மட்டும் இத்தனை இருக்கைகள் இருந்தும் நமக்குப் பிடித்த இருக்கையை முன்பதிவு செய்ய முடியாது. ஏன் தெரியுமா? இதற்குப் பின்னால் ஓர் இயற்பியல் தத்துவமே ஒளிந்திருக்கிறது.

ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு வாகனம். இதில் நமது விருப்பதின் பேரில் இருக்கை முன்பதிவு செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக ரயில்களில் S1, S2 S3…. என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

   
Train seat

#image_title

ஆனால் நாம் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் ஒதுக்கப்படும். அதாவது. 30 – 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். இப்படி எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு தான் அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.

இதுபோலத்தான் படுக்கை வசதி கொண்ட கோச்களிலும் நடைபெறும். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும். ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். மேலும் ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

Train ticket

#image_title

இது குடும்பமாக இல்ல.. சினிமா பல்கலைக்கழகமா? தலைசுற்ற வைக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் உறவுகள் ரஜினி முதல் அனிருத் வரை நீளும் லிஸ்ட்

மேலும் கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணமாம். 100 கி.மீ. வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது. வியப்பாக இருக்கிறதல்லவா..!

author avatar
Continue Reading

More in LIFESTYLE

To Top