Connect with us
Milky mist

HISTORY

ஜீரோ to 1000 கோடி Business.. சாதித்த ஈரோட்டுத்தமிழன்.. Milky Mist உருவான வரலாறு

இன்று பால் மற்றும் பால்சார்ந்த பொருட்களை விற்பனை செய்து பனீர் உலகின் கிங் -ஆக தன்னை நிலைநிறுத்தி பெரும் தொழிலதிபராக மாறியிருக்கிறார் இந்த ஈரோட்டுத்தமிழன். இவரது நிறுவனம் தான் MILKY MIST DIARIES.  வெறும் பாலை மட்டுமே நம்பியிருந்த நிறுவனத்தினை அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று இன்று உலகின் நம்.1 பால் பொருட்கள் தயாரிப்பாளராக வலம் வருகிறார் சதீஷ்.

இவரது தந்தை ஆரம்ப காலகட்டத்தில் ஈரோட்டுப் பகுதியில் கைத்தறி நெசவுத் தொழிலைச் செய்து வந்திருக்கிறார். இந்த தொழில் போதிய வருமானம் இல்லாததால் பின்னர் அந்தப் பகுதி விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து அதை பெங்களுரில் விற்பனை செய்திருக்கிறார். இதிலும் பெரிதாக லாபம் கிடைக்காததால் இவருடைய இந்தத் தொழிலை இவரது மகன் சதீஷ் ஏற்று நடத்த ஆரம்பித்தார்.

   

இத்தனைக்கும் அவர் படித்தது 8-வது மட்டுமே. இவரும் தந்தையின் தொழிலை சற்று கூடுதல் கவனத்துடன் செய்ய ஆரம்பிக்க திருப்புமுனை பெற ஆரம்பித்தது. இவர் அனுப்பும் பாலை பெங்களுரில் ஒருவர் மதிப்புக் கூட்டி பனீராக மாற்றி விற்பனை செய்ய இந்த ஐடியாவை நாமே செய்யலாமே என்று எண்ணி அதற்குரிய தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு  தங்களது நிறுவனத்தில் முதன் முதலாக 10 கிலோ பனீர் உற்பத்தி செய்தார். இவரது பொருளுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து 10 கிலோவானது  அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நூறுகிலோவாக மாறியது.

Milk

#image_title

சாதாரண தேங்காய் எண்ணெய்க்குப்பின் இருக்கும் 70,000 கோடி சாம்ராஜ்யம்.. பாரசூட் தேங்காய் எண்ணெய் உருவான வரலாறு..

இதன்பின்னர் தங்களுக்கென தனி ஸ்டோரையும் உருவாக்கி விற்பனை செய்து வந்தவர்கள் தங்களது பிராண்டை விளம்பரப்படுத்த அதற்கு MILKY MIST என்று பெயர் சூட்டியிருக்கின்றனர். இதற்கிடையில் தங்களது ஆரம்பத் தொழிலான பால் ஏற்றுமதியை நிறுத்தி முழுக்க முழுக்க பால் பொருட்கள் தயாரிப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார் சதீஷ். 2007 ஆண்டுகளில் தங்களது நிறுவனத்தினை முதன் முதலாக விளம்பரப்படுத்த ஆரம்பித்தார்.

Milky

#image_title

அதன்பிறகு மளமளவென ஆர்டர்கள் குவிய 2011க்குப் பிறகு MILKY MIST நிறுவனம் பெரிய அளவில் வளர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் 10 கிலோவை பனீரை தயாரித்தவர்கள் பின் 2015-ல் 15 டன் பனீரை தயாரித்து இமாலய சாதனை படைத்திருக்கின்றனர். தற்போது இந்த அளவு இதைக்காட்டிலும் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் தினமும் சுமார் 6.5 லட்சம் லிட்டர் பாலை பயன்படுத்துகின்றனர். பனீர் மட்டும் நிற்காது தொடர்ந்து தயிர், சீஸ், லஸ்ஸி போன்ற பால் பொருட்கள் என 25 பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

2009-களில் வெறும் 39 கோடியாக இருந்த இவர்களின் வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து  இன்று 1100 கோடி வர்த்தகத்தை செய்து வருகிறது இந்த ஈரோட்டுக்காரனின் MILKY MIST நிறுவனம்.

author avatar
Continue Reading

More in HISTORY

To Top