“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தஸ்லீமா தனது தாய் ஆசியம்மாள் (48) வீட்டில் வசித்து வந்தார். மேலும், அவர் தனது கணவரை விவாகரத்து செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய அஜ்மத் உசேன், கடந்த 16-ம் தேதி இரவு அமராவதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தஸ்லீமா பேகமும் குழந்தைகளும் வீட்டில் இல்லாத நிலையில், மாமியார் ஆசியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அஜ்மத் உசேன் கோரிக்கை விடுக்க, அதற்கு ஆசியம்மாள் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி அஜ்மத் உசேனைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், “நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டேன்; ஆனால் அதற்கு என் மாமியார் இடையூறாக இருந்தார். அவர் இருக்கும் வரை என் குடும்பம் ஒன்று சேராது என்பதால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ பாவம்…! ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த 75 வயது முதியவர்… கீழே தள்ளி கடித்து குதறிய தெரு நாய்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…

3 minutes ago

“அதே கேள்வியை மத்தவங்ககிட்ட கேப்பீங்களா?”… சர்ச்சைக்கு கூலாக பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா சர்மா… கேரள நிருபரை கிழித்துத் தொங்கவிட்ட இணையவாசிகள்…!!

மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா சர்மா, தான் அறிமுகமாகும் 'கலிஃபா' என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகச் சமீபத்தில்…

9 minutes ago

“நாங்கள் எழுவோம்” என முழங்கிய திமுக… ஆவேச பதிலளித்த அமைச்சர்… சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அனல் பறக்கும் வார்த்தைப் போர்…

24 minutes ago

தனித்தனி அறையில் தூங்க சென்ற தம்பதி…. 5 வயது மகனும், தந்தையும்…. விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து…

32 minutes ago

ஐயோ நாங்க இப்படி ஆகும் நினைக்கல..! 3-வது மாடியில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் பரிதாபம்…!!

பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில், குடியிருப்பின் மூன்றாம் மாடி அமைப்பில் உள்ள கிரில்லில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன்…

32 minutes ago