கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த 75 வயது முதியவரான அப்துல் சத்தார் புட்டண்ணவர் என்பவரைத் தெருநாய் ஒன்று எதிர்பாராதவிதமாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. சலூனுக்குச் செல்வதற்காக நடந்து சென்ற அவரை, அந்த நாய் கீழே தள்ளி கால் மற்றும் தொடைப் பகுதியில் 7 முதல் 8 முறை பலமாகக் கடித்துக் குதறியுள்ளது.
முதியவர் நாயிடம் இருந்து தப்பிக்கப் போராடிய நிலையில், சுற்றியிருந்த பொதுமக்கள் ஓடிவந்து நாயை விரட்டி அவரை மீட்டுள்ளனர். தீவிர இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவர் உடனடியாகக் அரசு சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…