தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகப் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் மறியலை மீறிச் செல்ல முயன்றதால், விசிகவினருக்கும் அவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பான சூழலும் நிலவியது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்றார். அப்போது, அந்த இளைஞர் காவலரிடம் ஏகவசனத்தில் (ஒருமையில்) பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் இளைஞரின் கன்னத்தில் அறைய, பதிலுக்கு அந்த இளைஞரும் காவலரின் கன்னத்தில் அறைந்ததால் சூழல் மேலும் கைமீறிப் போனது. இச்சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…