சினிமா நடிகர்களில் இளம் நாயகர்கள் பலரும், ரஜினி ரசிகர்களாக தான் இருக்கின்றனர். இதை பல இடங்களில் அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். உதாரணமாக சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர். அதே போல், ராகவா லாரன்ஸ்சும் மிக தீவிரமான ரஜினி ரசிகர்தான். அந்த வரிசையில் கார்த்திக் சுப்புராஜ், அனிரூத், லோகேஷ் கனகராஜ், நெல்சன் என பலரும் ரஜினிகாந்தின் மிக தீவிரமான விசிறிகளாக இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட அவர்களுக்கு ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதுதான் அவர்களது வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில், ரஜினி 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி விட்டது. ஜெயிலர் படத்திலேயே அவர் நடிக்க இருந்ததாகவும், சில காரணங்களால் அது நடக்கவில்லை என்றும், ரஜினியே எஸ்கே வேண்டாம் என கூறியதாகவும் தெரிகிறது. ஒருவேளை வசந்த் நடித்த ரஜினியின் மகன் கேரக்டரில் எஸ்கே நடித்தால் இமேஜ் பாதிக்கப்படலாம் என ரஜினி யோசித்து இருக்கலாம்.
ஆனால் இப்போது ரஜினி 171ல் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி விட்டது. ஆனால் சிலர் வில்லன் கேரக்டரில் எஸ்கே நடிப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் வில்லன் கேரக்டரில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்தான் நடிக்கிறார். வேறொரு முக்கிய கேரக்டரில்தான், சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஏற்கனவே, இசையமைப்பாளர் இமான் விவகாரத்தில், எஸ்கே பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், சினிமாவிலும் அவரை வில்லத்தனமாக காட்ட வாய்ப்பில்லை. அதனால் சிவகார்த்திகேயன் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…