விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். துவங்கியது முதலே மாயா ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வருகிறார். அவரின் உண்மைமுகம் தற்பொழுது வெளிப்பட்டு வருகிறது. தற்பொழுது 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ரெட் கார்டு சூழ்ச்சிக்கு முக்கிய காரணம் மாயா தான். அவரும் அவருடைய gang ஒன்றாக சேர்ந்து பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றி உள்ளனர். தற்பொழுது பிரதீப் சென்று ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், பிரதீப் சென்றதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து பிரதீப்பே இருந்திருக்கலாம் என்று சொல்ல தொடங்கிவிட்டனர். குறிப்பாக வைல்ட் கார்டு போட்டியாளர்களான அர்ச்சனா, தினேஷ் மற்றும் விச்சுமா கொடுக்கும் டார்ச்சரை இவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் மாயா, ஐஷு மற்றும் பிராவோ ஆகிய மூவரும் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டுள்ளனர். அப்பொழுது மாயா ‘இவங்க கொடுக்கிற டார்ச்சருக்கு பதிலாக பிரதீப்பே இருந்திருக்கலாம், அவன் டார்ச்சர் கூட தாங்கிகிட்டு கேம் விளையாடி இருக்கலாம். அவனும் விளையாடி இருப்பான். ஆனால் இவங்க விஷமா இருக்காங்க. தாங்கவே முடியவில்லை என்று தினேஷ் குறித்து மாயா கூறி கதறுகிறார். எப்படியும் அடுத்து திட்டம் போட்டு தினேஷை எப்படி வெளியேற்றலாம் என மாயா gang யோசிப்பார்கள் என்பது முடிவாகி விட்டது. இதோ அந்த வீடியோ…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…