20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சாரஜா விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டீனா என்ற மனைவியும், 10-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த ஜூலை 20 அன்று பிரகாஷை அவரது தம்பி போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் போனை எடுக்காமல் மெசேஜ் மட்டும் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் விசாரணையில் இறங்கியபோது, பிரகாஷ் காணாமல் போனது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், ஓமன் செல்லும் வழியில் நின்றிருந்த ஒரு காரில் இரண்டு பைகளில் 9 துண்டுகளாக வெட்டி அடைக்கப்பட்ட நிலையில் பிரகாஷின் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டன. டிஎன்ஏ பரிசோதனையில் அது பிரகாஷின் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு சாரஜாவில் இருந்த அவரது மனைவி டீனா மற்றும் மகன் இருவரும் மாயமாகியுள்ளனர். மனைவியே இக்கொலையைச் செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்கலாம் எனப் பிரகாஷின் தம்பி உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச போலிஸார் மற்றும் தூதரக அதிகாரிகள் மூலம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Devi Ramu

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

50 minutes ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

2 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

2 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: 7 முதல் 16 வயது சிறுமிகளுடன்… சொகுசு பங்களாவில் நடந்த கொடூரம்…. போக்சோ வழக்கில் அதிர்ச்சி திருப்பம்….!

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

2 மணத்தியாலங்கள் ago