பிரபல நடிகை ராதா, தனக்குச் சொந்தமான ரூ. 46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி விவகாரம் குறித்துக் கண்ணீர் மல்கப் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் மேல்தளத்தில் இருந்த 5 காசோலை புத்தகங்களைத் திருடி, அதில் சுமார் 46 கோடி ரூபாயைப் பூர்த்தி செய்து, தனது அக்கா நடிகை அம்பிகாவின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தனது வளசரவாக்கம் வீட்டிற்குள்ளேயே தன்னை நுழைய விடாமல் தடுத்து வருவதாகவும், இதுகுறித்து அக்கா அம்பிகாவிடம் பேசத் தொலைபேசியில் அழைத்தால் அவர் அழைப்பை ஏற்க மறுப்பதாகவும் ராதா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து பேட்டியில் விளக்கிய ராதா, காசோலை வங்கியில் செலுத்தப்பட்டவுடன் தனது கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு அந்தப் பணப்பரிவர்த்தனையை நிறுத்தியதாகக் கூறியுள்ளார். அந்தச் செக் புக்கில் தொகையை நிரப்பியது தனது தம்பி மல்லிகார்ஜுன் என்பதால் அவர் மீதும் தனக்குச் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 2006-ஆம் ஆண்டே குடும்ப சொத்துக்கள் முறைப்படி பிரிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி ‘ஏஆர்எஸ் கார்டன்’ பிரிவில் உள்ள பெரிய கட்டிடம் அம்பிகாவுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், ‘ஆர்ஆர் கார்டன்’ எனும் பிரிவை தான் நிர்வகித்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து காசோலைகளைத் திருடி, இந்த மிகப்பெரிய பணமோசடிக்குப் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பதைப் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தனது பொருட்கள் திருடப்பட்டதோடு, திட்டமிட்டு இந்தச் சதியில் ஈடுபட்ட இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தனக்குரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் நடிகை ராதா கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…
மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…