தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது இரவு சுமார் 7.30 மணியளவில் 25 முதல் 30 வயதுடைய மூன்று மர்ம நபர்கள் அவர்களை அணுகியுள்ளனர்.
தாங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பொய் கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மூவரும், சிறுமியையும் அவரது ஆண் நண்பரையும் கடுமையாக மிரட்டி அங்கிருந்து தப்பவிடாமல் தடுத்துள்ளனர். பின்னர், அந்த கும்பல் சிறுமியை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலிஸ் என நாடகமாடி கொடூரத்தில் ஈடுபட்ட அந்த 3 காவாலிகளையும் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…