உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்து பிணச் சிதைக்குத் தீ மூட்டிவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை வீர்பால் மீண்டும் சுடுகாட்டுக்குச் சென்றபோது, அவரது தந்தையின் உடல் எரிந்துகொண்டிருந்த சிதையின் மீதே ஒரு பாத்திரத்தை வைத்து, 3 நபர்கள் இறைச்சி சமைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். உடனடியாக அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், சுரேந்திரா என்பவனைக் கைகேடாகப் பிடித்துக் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சுரேந்திராவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூவரும் சுடுகாட்டில் வைத்து மது அருந்தியதாகவும், அப்போது போதையில் எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையின் தீயைப் பயன்படுத்தி இறைச்சி சமைக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளான். அதேவேளையில், இவர்கள் மாந்திரீகப் பூஜைகளுக்காக இப்படிச் செய்தார்களா என்ற கோணத்திலும் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடலைச் சிதையில் வைத்து இறைச்சி சமைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…