தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திடீரெனப் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் மருத்துவமனை உடையில், மூக்கில் ஆக்சிஜன் குழாயுடன் காணப்பட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலைக்கு என்ன நேர்ந்தது என்று பதற்றத்துடன் அன்போடு விசாரிக்கத் தொடங்கினர்.
1980-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. பிரபல பழம்பெரும் நடிகர் C.L. ஆனந்தனின் மகளான இவர், நடிகர் ஸ்ரீஹரியை மணந்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராகவா லாரன்ஸின் தம்பி நடிக்கும் ‘புல்லா’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி வரும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மருத்துவமனை புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கலக்கமடைந்த நிலையில், தனக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து டிஸ்கோ சாந்தி முதலில் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறிது நேரத்திலேயே “பேக் ஹோம்” எனப் பதிவிட்டு தான் வீடு திரும்பிவிட்டதை உறுதி செய்தார். இதனால் ரசிகர்கள் ஓரளவு நிம்மதியடைந்தாலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்ற கவலை தொடர்ந்து நிலவி வந்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி உண்மை நிலையை விளக்கியுள்ளார். சென்னை வந்தபோது தீவிர வைரஸ் காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்றதாகவும், லண்டன் செல்லும் தனது மகன்களை வழியனுப்ப மருத்துவரிடம் கோரிக்கை வைத்து வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது வீட்டிலேயே மருத்துவ அமைப்புகளுடன் செவிலியர் பராமரிப்பில் குணமடைந்து வரும் அவர், தனது நலனுக்காகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…