மகளைக் கொன்றுவிட்டு வடபழனியில் மொட்டை… ப்ளூ கலராக மாறிய உடல்…. சேலம் வர்ஷினி வழக்கில் போலீசாரையே அதிர வைத்த தந்தையின் ‘கௌரவ’ வேட்டை…!

Spread the love

சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், கௌரவக் கொலைக் காரணத்தினால் அவரது தந்தையே மகளைக் கொலை செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷினி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் நீல நிறமாக மாறியிருந்ததால், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பிரேதப் பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணை முடிவில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.

வர்ஷினி பள்ளிப் பருவத்தில் இருந்தே திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்த தனது டேக்வாண்டோ பயிற்சியாளரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். இதனைத் தந்தை வரதராஜன் பலமுறை கண்டித்தும், மகளின் மனதை மாற்ற சேலத்தில் மருத்துவப் படிப்பில் சேர்த்தும் பலன் அளிக்கவில்லை. கல்லூரிக்குச் சென்ற பின்பும் வர்ஷினி அந்த நபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், புத்தாண்டு விடுமுறையின் போது அவரைச் சந்திக்கச் சென்றதும் வரதராஜனுக்குத் தெரியவந்தபோது, குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படுவதாகக் கருதி அவர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று சேலம் வந்த வரதராஜன், தனது மகளிடம் அந்தக் காதலைக் கைவிடுமாறு மன்றாடியுள்ளார். ஆனால் வர்ஷினி தனது முடிவில் பிடிவாதமாக இருந்ததால், ஆத்திரமடைந்த வரதராஜன் மகளைத் தாக்கி, அவர் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கிக் கொலை செய்துள்ளார். மகள் இறந்ததை உறுதி செய்த பின், கொலையை மறைக்கத் திட்டமிட்ட அவர், வர்ஷினியின் செல்போனை எடுத்துக் கொண்டு சென்னைக்குத் தப்பிச் சென்றார். அங்கு வடபழனி முருகன் கோவிலில் மொட்டையடித்துக் கொண்டு, திருவண்ணாமலை மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் தலைமறைவாக இருந்துள்ளார்.

நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த வரதராஜன், நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுச் சேலம் வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, மகளின் தவறான உறவினால் ஏற்பட்ட ஆத்திரமே இக்கொலைக்குக் காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு தந்தையே தன் மகளை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் சேலம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago