#image_title
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ரஜினிகாந்த் பாலச்சந்தரால் அறிமுகமான போது வில்லன் நடிகராகவே பல படங்களில் நடிக்கவைக்கப்பட்டார். அவரை கதாநாயகன் ஆக்கியது கலைஞானம் அவர்கள்தான். பைரவி படத்தில் அவர ஹீரோவாக்கினார். அதன் பின்னர் முள்ளும் மலரும் வந்து அவரை திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார. அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது எஸ் பி முத்துராமனும், ராஜசேகரும்தான். இவர்கள் இருவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த ரஜினி ஹிட் படங்களாகக் கொடுத்தார்.
#image_title
அப்படி ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம்தான் தம்பிக்கு எந்த ஊரு. இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் சொன்ன ரஜினி ஷூட்டிங்கின் போது என்ன முழுக்க முழுக்க காமெடியாகவே எடுக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு கதாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலத்திடம் கேட்டுள்ளார்.
அவர் ரஜினியிடம் “இப்பவே உன் படத்துல 6 சண்டைக் காட்சி வைக்குறாங்க.. இன்னும் கொஞ்சம் வருஷம் போனா அப்புறம் ஒரு ரீலுக்கு ஒரு சண்டைன்னு 14 சண்டையா வைக்க முடியும். அதனால காமெடியும் பண்ணனும். இந்த படத்த நான்தான் தயாரிக்கிறேன். படம் ஓடலன்னா எனக்குதான் நஷ்டம். அதனால் நீ கவலைப்படாம நடி.
ஆனா ஒன்னு இந்த படம் வந்ததும் இதுதான் ஒன்னோட டெம்ப்ளேட் ஆகப் போகுது. இதுக்கப்புறம் நீ எத்தனை படம் நடிச்சாலும் முதல் 20 நிமிஷம் காமெடி பண்ணிட்டு ஆக்ஷன் பண்ற மாதிரி நடிக்கப் போற” என உறுதியாகக் கூறியுள்ளார். படமும் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதே போல ரஜினி இப்போது வரை நடிக்கும் படங்களில் முதலில் நகைச்சுவையோடுதான் ஆரம்பிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில்…
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…
மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா சர்மா, தான் அறிமுகமாகும் 'கலிஃபா' என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகச் சமீபத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிகாரா பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் சிட்டி மாடல் பள்ளியில் பெண் ஒருவர் கொடூரமாக…