Categories: சினிமா

நான் என்ன ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா?… ஷூட்டிங்கை விட்டே வெளியேறிய பானுமதி… அவரின் கண்டீஷனுக்குப் பணிந்த AVM நிர்வாகம்!

Spread the love

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுமதி. தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் சுயமரியாதை கொண்டவர். எம் ஜி ஆரையே மிஸ்டர் எம் ஜி ஆர் என்று பேர் சொல்லி அழைக்கக் கூடியவர். அதுபோல பலரையும் தூக்கியெறிந்து பேசக் கூடியவர். ஆனால் அவர் பக்கம் நியாயம் இருக்கும் என்பதால் அவருக்கான வாய்ப்புகள் குறையவில்லை.

இப்படிதான் அவர் தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது. ஏ.வி.எம் தயாரித்த அன்னை படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க பானுமதியை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் அப்போது பானுமதியோ, பழைய மனக்கசப்புகளால் ஏவிம் தயாரிப்பு படங்களில் நடிப்பதில்லை என்ற மனநிலையிலிருந்தார்.

ஆனால் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரும், பானுமதிதான் இப்படத்தில் நடித்தாக வேண்டுமென்று கூறி, அவரை ஒப்பந்தம் செய்ய தனது மகன்களை அனுப்பினார். அதே போல சீனியர் இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு போன்றோரும் கேட்டுக்கொண்டதால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் பானுமதி. ஆனால் ஷூட்டிங் நடக்கும் போது மெய்யப்ப செட்டியார் செட்டுக்கு வரக் கூடாது என கண்டீஷன் போட்டாராம்.

#image_title

அதற்கும் ஏவிஎம் தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. இதற்கிடையில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது திடீரென ஒரு நாள் செட்டை விட்டு வெளியேறிவிட்டாராம். இதைப் படக்குழுவினர் தயாரிப்பாளர் மெய்ய செட்டியாரிடம் சொல்லியுள்ளனர். அவர் என்ன காரணம் என்று கேட்டு வாருங்கள் என இயக்குனர்களை பானுமதி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து கிருஷ்ணன் – பஞ்சு மற்றும் அப்படதின் கதாசிரியரும் பானுமதியின் வீட்டுக்கு சென்றனர். அப்போது ஷூட்டிங்கில் இருந்து தான் வெளியேறிய காரணத்தைப் பானுமதி கூறியுள்ளார். அதில் ஒரு  காட்சியில் ‘அம்மாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதுபோல வசனம் வருகிறது. நான் சும்மா நின்று கொண்டிருக்கிறேன். நான் என்ன ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா? எனக்கும் அந்த காட்சியில் நல்ல வசனத்தை எழுதி கொடுங்கள். அப்போதுதான் படத்தில் நடிப்பேன்’ என சொல்லியுள்ளார். அவர் சொல்வது நியாயம்தான் என்பதால் படக்குழுவினரும் அவருக்கு வசனம் எழுதிக் கொடுக்க அதன் பின்னர் நடித்துக் கொடுத்துள்ளார்.

vinoth

Recent Posts

FLASH NEWS: “அடுத்து பெரிய சம்பவம் இருக்கு”…. அன்புமணி உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு….. சற்றுமுன் அரசியலில் புதிய புயல்….!

தமிழகத்தில் 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான…

8 minutes ago

BREAKING: பதவி கிடையாது…. வானதி சீனிவாசன் திடீர் நீக்கம்…. பாஜக மேலிடம் போட்ட அதிரடி உத்தரவு…!

பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6…

12 minutes ago

சேலத்தை உலுக்கிய பயங்கரம்… 13 வயது சிறுமிக்கு மதுவை ஊற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை…. 2 சிறுவர்கள் செய்த அதிர்ச்சி செயல்…..!

சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை…

17 minutes ago

விவசாயிகள் ஷாக்… CM விஜய் அறிவித்த ரூ.75,000 கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் முழுசா கிடைக்கும்?…. லிஸ்ட்டுல உடனே செக் பண்ணுங்க….!

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…

27 minutes ago

BREAKING: அண்ணாமலைக்குப் பின் டெல்லியில் ஒலிக்கும் தமிழரின் குரல்…. தேசிய பாஜகவில் களமிறங்கிய ம.வெங்கடேசன்…. நிதின் நபின் அறிவிப்பு….!

பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…

33 minutes ago

பயங்கர சத்தம்..! சுக்குநூறான கட்டடம்..! 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறல்… நொடியில் நடந்த கோர விபத்து… பதறவைக்கும் வீடியோ…!!

பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…

49 minutes ago