கூகுள் மேப் கைவிட்ட அந்த இருட்டு நேரம்… நள்ளிரவு 3.30 மணிக்கு நடுரோட்டில் சிக்கிய மம்முட்டி…. 10 கி.மீ பைக் ஓடிவந்த இளைஞர்…. நெகிழ்ந்த மெகா ஸ்டார்….!

Spread the love

தமிழ் திரையுலகத்தின் முக்கிய படப்பிடிப்பு தளங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, நள்ளிரவில் தனது குழுவினருடன் கேரளா நோக்கி காரில் புறப்பட்டார் மம்முட்டி. மேலூர் வழியில் சாலை பணிகள் நடைபெற்று வந்ததால், கூகுள் மேப் வழிகாட்டுதலிலும் தடுமாறி, அதிகாலை 3.30 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியில் வழி தெரியாமல் அவர்கள் சிக்கித் தவித்தனர். அப்போது அங்கிருந்த பெட்ரோல் பங்கில் இருந்த இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளனர்.

சூழ்நிலையைப் புரிந்துகொண்ட அந்த இளைஞர், சற்றும் தயங்காமல் தனது பைக்கை எடுத்துக்கொண்டு மம்முட்டி அண்ட் டீமை பின் தொடருமாறு கூறி, சுமார் 10 கிலோமீட்டருக்கும் மேல் முன்னால் சென்று மெயின் ரோட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டியுள்ளார். ‘இனி நேராகச் சென்றால் கேரளா போய்விடலாம்’ என்று அவர் வழியனுப்பியபோது, நெகிழ்ந்துபோன நடிகர் மம்முட்டி அந்த இளைஞரைக் கட்டிப்பிடித்து தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், தனக்கு உதவிய அந்த இளைஞரின் பெயர் பாண்டியன் என்றும், அவர் எனது நண்பன் என்றும் மம்முட்டி நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/oneindianews?ref=embed_video

மலையாள திரைப்படங்களில் பல நேரங்களில் தமிழர்கள் எதிர்மறை கதாபாத்திரங்களிலோ அல்லது வில்லன்களாகவோ சித்தரிக்கப்படும் போக்கு விமர்சனத்திற்குள்ளாவது உண்டு. ஆனால், நள்ளிரவில் திசை தெரியாமல் தவித்த ஒட்டுமொத்த மலையாள திரையுலகத்தின் மாபெரும் கலைஞருக்கு, எந்த எதிர்பார்ப்புமின்றி உதவியதன் மூலம் தமிழர்களின் விருந்தோம்பலையும் மனிதநேயத்தையும் பாண்டியன் மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்குப் பிறகாவது, மலையாள சினிமாவில் தமிழர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் சித்தரிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலக ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கொந்தளித்த உதயநிதி…. சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேறிய திமுக…. சற்றுமுன் பரபரப்பு….!

கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…

3 minutes ago

“அமெரிக்க வீரர்களை கொன்றால் $30,000…. வீராங்கனைகளுக்கு $60,000″…. ஈரானின் பகீர் அறிவிப்பு…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…

11 minutes ago

100வது நாளில் புதிய புரட்சி…. பத்திரப்பதிவுத் துறையை மொத்தமாக டிஜிட்டலாக மாற்றிய புதிய திட்டம்…. ‘ஸ்டார் 3.0’ மூலம் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை….!

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

16 minutes ago

துரைமுருகன் பதவி பறிப்பு?…. உதயநிதிக்கு புதிய பதவி… கொந்தளிக்கும் சீனியர்கள்…. திமுகவில் அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்…. அலறும் அறிவாலயம்….!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…

20 minutes ago

ஒரே மாதத்தில் 5 கொடூரக் கொலைகள்…. தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறதா?…. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்…. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்…..!

தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அரங்கேறி வரும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் பொதுமக்கள்…

25 minutes ago

JUST IN: தவெக ஆட்சி கவிழ்ந்து விடும்.. சபாநாயகர் கூறினார்…. பேரவையில் மரண மாஸ் பதிலடி….!

இன்றைய சட்டமன்ற அலுவலில் உரையாற்றிய சபாநாயகர் JCD பிரபாகர், தவெக அரசின் 100 நாள் சாதனைகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப்…

29 minutes ago