மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும் வகையில் ஈரானிய ராணுவ தளபதி அமீர் ஹடாமி அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்க ராணுவ வீரர்களை உயிருடன் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ 30,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்றும், இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடும் வீராங்கனைகளுக்கு இந்த வெகுமதி இரட்டிப்பாக 60,000 டாலர்களாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வீரரைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதம் சந்தை விலையை விட இரு மடங்கு அதிக விலைக்கு ஈரானிய ராணுவத்தால் வாங்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் எனவும், தாக்குதல் நடத்திய நபருக்கு புதிய ஆயுதம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதல்களில் ஏற்கனவே 17 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்’ கீழ் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தற்சமயம் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. ஈரானிய ராணுவத்தின் இந்த பகிரங்கமான வெகுமதி அறிவிப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவப் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், சர்வதேச சமூகத்தில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…
பெல்ஜியம் நாட்டின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.…
டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி…
தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத்…
கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…