காமெடிப் படமா என நடிக்க பயந்த ரஜினி… பஞ்சு அருணாசலம் சொன்ன ஒரு வார்த்தை… சூப்பர் ஸ்டாரின் ரூட்டையே மாற்றிய அந்த படம்!

By vinoth on மே 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த் பாலச்சந்தரால் அறிமுகமான போது வில்லன் நடிகராகவே பல படங்களில் நடிக்கவைக்கப்பட்டார். அவரை கதாநாயகன் ஆக்கியது கலைஞானம் அவர்கள்தான். பைரவி படத்தில் அவர ஹீரோவாக்கினார். அதன் பின்னர் முள்ளும் மலரும் வந்து அவரை திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.

   

அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார. அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது எஸ் பி முத்துராமனும், ராஜசேகரும்தான். இவர்கள் இருவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த ரஜினி ஹிட் படங்களாகக் கொடுத்தார்.

   

#image_title

 

அப்படி ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம்தான் தம்பிக்கு எந்த ஊரு. இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் சொன்ன ரஜினி ஷூட்டிங்கின் போது என்ன முழுக்க முழுக்க காமெடியாகவே எடுக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு கதாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலத்திடம் கேட்டுள்ளார்.

அவர் ரஜினியிடம் “இப்பவே உன் படத்துல 6 சண்டைக் காட்சி வைக்குறாங்க.. இன்னும் கொஞ்சம் வருஷம் போனா அப்புறம் ஒரு ரீலுக்கு ஒரு சண்டைன்னு 14 சண்டையா வைக்க முடியும். அதனால காமெடியும் பண்ணனும். இந்த படத்த நான்தான் தயாரிக்கிறேன். படம் ஓடலன்னா எனக்குதான் நஷ்டம். அதனால் நீ கவலைப்படாம நடி.

ஆனா ஒன்னு இந்த படம் வந்ததும் இதுதான் ஒன்னோட டெம்ப்ளேட் ஆகப் போகுது. இதுக்கப்புறம் நீ எத்தனை படம் நடிச்சாலும் முதல் 20 நிமிஷம் காமெடி பண்ணிட்டு ஆக்‌ஷன் பண்ற மாதிரி நடிக்கப் போற” என உறுதியாகக் கூறியுள்ளார். படமும் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதே போல ரஜினி இப்போது வரை நடிக்கும் படங்களில் முதலில் நகைச்சுவையோடுதான் ஆரம்பிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.