“ஐயோ என்னடா இது… அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர்… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறித் துடித்த கொடூரம்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!”

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அங்குள்ள ஒரு வயது குழந்தையின் பெற்றோருக்கு 3 முட்டைகள் வழங்கப்பட்டன.

அந்த முட்டைகளில் ஒன்றை குழந்தையின் பெற்றோர் வீட்டில் வேகவைத்து உடைத்துப் பார்த்தபோது, அதனுள் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காண்பித்த நிலையில், அதற்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், அந்த முட்டையின் ஓடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அரசு சார்பில் வழங்கப்பட்டவையா அல்லது வெளியில் வாங்கப்பட்டவையா என ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

53 minutes ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

58 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

1 மணத்தியாலம் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

1 மணத்தியாலம் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

1 மணத்தியாலம் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

1 மணத்தியாலம் ago