விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஒலி பொறியாளராக தனது கேரியரை தொடங்கினார் விஜய் ஆண்டனி. பிறகு டிஷ்யும் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடித் தெரு, சலீம், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் விஜய் ஆண்டனி. இசையமைப்பது மட்டுமில்லாமல் பல வெற்றி திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஜய் ஆண்டனி. அதைத் தொடர்ந்து சலீம் இந்தியா பாகிஸ்தான் சைத்தான் பிச்சைக்காரன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி வெளிநாடுகளை விட நம் நாடு மேல் என்று கூறியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி கூறியது என்னவென்றால், சுவிட்சர்லாந்தை காட்டிலும் நம்ம ஊரு எவ்வளவோ மேல். அங்கே வீட்டை கூட விட்டு வெளியே போகவே முடியாது. அவ்வளவு குளிராக இருக்கும். ரோடில் நின்று நம்ம ஊரு மாதிரி டீ குடிக்க முடியாது. நடக்க முடியாது வழுக்கி கீழே விழுந்துருவோம். என்ன வந்தாலும் நம்ம ஊரு தான் பெஸ்ட். அந்த ஒரு எல்லாம் சும்மா பாக்குறதுக்கு தான் நல்லா இருக்கும் வாழறதுக்கு நல்லா இருக்காது என்று ஓபனாக பேசி இருக்கிறார் விஜய் ஆண்டனி.
நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…
விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…